ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

ஐபிஎல் இறுதிச்சுற்றின்போது ஆசியக் கோப்பை குறித்த ஆலோசனைக் கூட்டம்!

வங்க தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் மூத்தத் தலைவர்கள், ஐபிஎல் இறுதிச்சுற்றைக் காண அழைக்கப்பட்டுள்ளார்கள்.

ஜெய் ஷா மற்றும் ரோஜர் பின்னி  •  BCCI

ஜெய் ஷா மற்றும் ரோஜர் பின்னி  •  BCCI

ஆசியக் கோப்பை 2023 போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றின்போது நடைபெறவுள்ளது.
2023 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டாலும் பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது. இதனால் போட்டியை எங்கே நடத்துவது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடையைக் கண்டுபிடிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய ஆலோசனையை முன்வைத்தது. அதன்படி, முதல் 13 போட்டிகளை பாகிஸ்தானிலும் இறுதிச்சுற்று ஆட்டம் உள்ளிட்ட பிற ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்தலாம் எனத் தெரிவித்திருந்தது. இருப்பினும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இதுவரை இதற்கு அனுமதியளிக்கவில்லை.
இந்நிலையில் வரும் 28 அன்று அஹமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றின்போது ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த ஆலோசனை நடைபெறவுள்ளது. இதற்காக வங்க தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் மூத்தத் தலைவர்கள், ஐபிஎல் இறுதிச்சுற்றைக் காண அழைக்கப்பட்டுள்ளார்கள். அப்போது அவர்களுடன் பிசிசிஐ செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய்ஷா ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஆசியக் கோப்பை 2023 தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன் என ஜெய் ஷாவும் இதுகுறித்துப் பேசியுள்ளார்.
இருப்பினும், ஆசியக் கோப்பை தொடர்பான இறுதி முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒருங்கிணைந்தே எடுக்கப்படும் எனத் தெரிகிறது.