ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

ஷுப்மன் கில் ஒரு சூப்பர்ஸ்டார்: ஹார்திக் பாண்டியா புகழாரம்!

குஜராத் மற்றும் இந்திய அணிக்கு ஷுப்மன் கில் மிகப்பெரிய விஷயங்களைச் செய்யப்போகிறார் என ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஷுப்மன் கில்  •  Associated Press

ஷுப்மன் கில்  •  Associated Press

குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது குஜராத். இந்த முக்கியமான வெற்றிக்கு ஷுப்மன் கில்லின் அதிரடி சதமும் முக்கியக் காரணம்.
அஹமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 233 ரன்களைக் குவித்தது. குஜராத்தின் ஷுப்மன் கில் 60 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் 129 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் 2023 போட்டியில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் 851 ரன்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் அவர்.
ஷுப்மன் கில்லின் அதிரடி சதம் குறித்து ஹார்திக் பாண்டியா பேசியதாவது, "அவருக்கிருக்கும் தெளிவும் தன்னம்பிக்கையும் ஆச்சர்யப்படுத்துகிறது. நான் பார்த்த சிறந்த டி20 இன்னிங்ஸ் இதுதான். மிக நிதானமாகவும் நேர்த்தியாகவும் தனது ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். கில் ஒரு சூப்பர் ஸ்டார். குஜராத் மற்றும் இந்திய அணிக்கு அவர் மிகப்பெரிய விஷயங்களைச் செய்யப்போகிறார்" என்றார்.
குஜராத்தின் வெற்றிக்கு எப்போதுமே பக்கபலமாக இருக்கும் ரஷித் கான் குறித்து பாண்டியா பேசுகையில் "ஆட்டம் நான் எதிர்பார்த்த மாதிரி செல்லாத வேளைகளில் ரஷித் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவார். அவரைப் பற்றி நிறையவே பேசிவிட்டோம். ஆனாலும், சில நேரங்களில் அவர் விளையாடும் விதம் பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இருப்பதில்லை" என்றார்.
மேலும், கேப்டனாக தன்னுடைய பொறுப்பு அணியில் அனைத்து வீரர்களும் சரியான மனநிலையில் இருப்பதை உறுதிசெய்வதே எனத் தெரிவித்துள்ளார் பாண்டியா. மும்பை அணியுடனான இந்த வெற்றியின் மூலம் இறுதி ஆட்டத்தில் சென்னையை எதிர்த்துக் களமிறங்குகிறது குஜராத்.