ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

ஐபிஎல் 2023: கோப்பையை வெல்லும் அணிக்குக் கிடைக்கும் பரிசுத்தொகை எவ்வளவு?

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மொத்தப் பரிசுத்தொகை 46.5 கோடி.

கோப்பையுடன் தோனி மற்றும் ஹார்திக் பாண்டியா  •  BCCI

கோப்பையுடன் தோனி மற்றும் ஹார்திக் பாண்டியா  •  BCCI

ஐபிஎல் 2023 போட்டி முடிவடைய இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. அஹமதாபாதில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஐபிஎல் போட்டி 2008 முதல் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு பருவங்களிலும் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 4.8 கோடியும் இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 2.4 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமையே வேறு. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மொத்தப் பரிசுத்தொகை 46.5 கோடி ஆகும். கடந்த ஆண்டும் இதே பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2023 கோப்பையைக் கைப்பற்றும் அணிக்கு ரூ. 20 கோடி பரிசாகக் கிடைக்கும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணி ரூ. 13 கோடியைப் பெறும். மூன்றாமிடம் பிடித்த மும்பை அணி ரூ. 7 கோடியையும் நான்காமிடம் பிடித்த லக்னெள அணி ரூ. 6.5 கோடியையும் பரிசுத் தொகையாகப் பெறும்.
அதேபோல, அதிக ரன்கள் எடுத்த மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்குத் தலா ரூ. 15 லட்சம் வழங்கப்படுகிறது. எமெர்ஜிங் பிளேயர் விருது பெறும் வீரருக்கு ரூ. 20 லட்சமும் மோஸ்ட் வேல்யூபிள் பிளேயர் விருது பெறும் வீரர் ரூ. 12 லட்சத்தையும் பரிசுத்தொகையாகப் பெறுவார்கள்.
மேலும், இந்தப் பருவத்தில் பவர் பிளேயர் விருது பெறும் வீரருக்கு ரூ. 15 லட்சமும் சூப்பர் ஸ்டிரைக்கர் மற்றும் கேம் சேஞ்சர் விருதுகளைப் பெறும் வீரர்களுக்குத் தலா ரூ. 12 லட்சமும் பரிசுத் தொகையாகக் கிடைக்கும்.