செய்திகள்

விராட் கோலி, ரோஹித் சர்மா முக்கிய வீரர்கள்: மைக் ஹஸ்ஸி கருத்து!

இந்தியாவிலும் ஷமி, சிராஜ் போன்ற உலகத் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மைக் ஹஸ்ஸி  •  Getty Images

மைக் ஹஸ்ஸி  •  Getty Images

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்று மைக் ஹஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி, தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியதில் பேட்டிங் ஆலோசகராக அவருடைய பங்கு முக்கியமானது.
உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதி மோதுகின்றன. இந்நிலையில், இரு அணிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய ஹஸ்ஸி "விராட் கோலி தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவரைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அதே போல, அனுபவ வீரரான ரோஹித் சர்மாவின் பேட்டிங்கும் இந்தியாவுக்கு முக்கியம்." என்று தெரிவித்தார்.
"இந்தியாவில் ஷமி, சிராஜ் போன்ற உலகத் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இரு பலமான அணிகள் மோதுவதால் உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சுவாரசியமாக இருக்கப் போகிறது" என்று ஹஸ்ஸி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியப் பந்துவீச்சாளராக இருப்பார். ஹேசில்வுட் காயத்தில் இருந்து மீண்டு வந்திருப்பது அந்த அணிக்குச் சாதகமான விஷயம். இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆனால் இந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்றார்.
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.