ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஒவ்வொரு அணிக்கும் கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு?

முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் மொத்தமாக 3.8 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 31.37 கோடி) பரிசுத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

ரோஹித் உடன் கம்மின்ஸ்  •  Getty Images

ரோஹித் உடன் கம்மின்ஸ்  •  Getty Images

2021 - 23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசுத் தொகை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது ஐசிசி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கி 11 வரையில் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஒவ்வொரு அணிக்கும் கிடைக்கவுள்ள பரிசுத்தொகை குறித்த விபரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் மொத்தமாக 3.8 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 31.37 கோடி) பரிசுத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றிபெறும் அணிக்கு 1.6 மில்லியன் டாலரும் (சுமார் ரூ. 13 கோடி) தோல்வியடையும் அணிக்கு 8,00,000 டாலரும் (சுமார் ரூ. 6.5 கோடி) கிடைக்கும்.
2021 - 23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணிக்கு 450,000 டாலர் (சுமார் ரூ. 3.5 கோடி) பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. அதேபோல, நான்காம் இடம் பிடித்த இங்கிலாந்து 3,50,000 டாலர் (சுமார் ரூ. 2.8 கோடி) தொகையைப் பெறுகிறது.
ஐந்தாம் இடத்திலிருக்கும் இலங்கைக்கு 2,00,000 டாலர் (சுமார் ரூ. 1.6 கோடி) பரிசுத்தொகை கிடைக்கவுள்ளது. 6,7,8,9 இடங்களைப் பிடித்த முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு தலா 1,00,000 டாலர் (சுமார் ரூ. 82 லட்சம்) வழங்கப்படவுள்ளது.