சூர்யகுமார் யாதவ் மேட்ச் வின்னர்! - ரிக்கி பாண்டிங்
"உலககோப்பையில் வெற்றி பெறுவதற்கு சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு மேட்ச் வின்னர் இந்திய அணிக்குத் தேவை."
ESPNcricinfo staff
07-Apr-2023
சூர்யகுமார் யாதவ் • BCCI
ஒருநாள் உலககோப்பை போட்டியில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய பேட்டர் சூர்யகுமார் யாதவ் சமீப காலமாக ஒருநாள் ஆட்டங்களில் ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தொடந்து மூன்று ஆட்டங்களில் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் யாதவுக்கு ஆதரவாக ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
"வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் அபாயகரமான ஆட்டக்காரர் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே இந்திய அணி அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தில் தொடர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலககோப்பை போன்ற முக்கியான போட்டியில் வெற்றி பெறுவதற்கு அவரைப் போன்ற ஒரு மேட்ச் வின்னர் இந்திய அணிக்குத் தேவை." என்றார் பாண்டிங்.
சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸுடன் ரிக்கி பாண்டிங் ஒப்பிட்டுள்ளார். ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை ஐந்தாவது இடத்தில் களமிறக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
23 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 2 அரை சதங்களுடன் 433 ரன்களை 24.05 சராசரியில் எடுத்துள்ளார்.