ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

கேகேஆர் அணியில் இருந்தபோது...: மனம் திறந்த ராபின் உத்தப்பா

கம்பீர் விலகிய பிறகு எல்லாம் மாறியது. நான் தனிமைப்பட்டதாக உணர்ந்தேன்...

ராபின் உத்தப்பா  •  BCCI

ராபின் உத்தப்பா  •  BCCI

கொல்கத்தா அணியை விடவும் சிஎஸ்கே அணி மீது அதிக விசுவாசத்துடன் இருப்பது குறித்த கேள்விகளுக்கு ராபின் உத்தப்பா பதில் அளித்துள்ளார்.
ராபின் உத்தப்பா இந்திய அணிக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2007-ல் முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, பெங்களூர் ஆகிய அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.
கொல்கத்தா அணிக்காக 2014 முதல் 2019 வரையில் விளையாடிய உத்தப்பா அந்த அணி 2014-ம் ஆண்டு கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாகவும் இருந்தார். 2021-ல் சென்னை அணியில் இணைந்தார். அந்த வருடம் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றதில் உத்தப்பாவின் பங்களிப்பும் உண்டு. கடந்த வருடம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் உத்தப்பா ஓய்வு பெற்றார்.
சமீபத்தில் உத்தப்பா அளித்த பேட்டியில், மீண்டும் விளையாட முடியும் என்றால் சென்னை அணிக்காக விளையாடுவேன் எனத் தெரிவித்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க, ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணியைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.
இதையடுத்து கொல்கத்தா அணியை இதுபோல ஏன் பாராட்டுவதில்லை என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் அவரிடம் எழுப்பினார்கள்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: கொல்கத்தா அணியில் கெளதம் கம்பீர் கேப்டனாக இருந்த என்னுடைய முதல் நான்கு ஆண்டுகளுக்கும் அதற்குப் பிறகான இரு ஆண்டுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவை என்னுடைய ஆட்டத்தையும் பெருமளவில் பாதித்தது. ஆனால் அதற்கும் தலைமைப்பண்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் கூற விரும்புகிறேன்.
கம்பீர் விலகிய பிறகு எல்லாம் மாறியது. நான் தனிமைப்பட்டதாக உணர்ந்தேன். இருப்பினும் கொல்கத்தா ரசிகர்களின் மீதான எனது அன்பு என்றும் மாறாது. இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.