ஆட்டங்கள் (7)
உலகக் கோப்பை (1)
WC Warm-up (2)
Asian Games (M) (1)
IND v ஆஸி (3)
செய்திகள்

பாண்டியாவின் தலைமைப்பண்பு தோனியை நினைவூட்டுகிறது - காவஸ்கர் புகழாரம்!

புள்ளிகள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியதிலேயே அவர்கள் எப்படி இந்த ஆண்டு விளையாடி வருகிறார்கள் என்பது புரியவரும் என்றார் காவஸ்கர்.

பாண்டியா உடன் தோனி  •  Sandeep Shetty/BCCI

பாண்டியா உடன் தோனி  •  Sandeep Shetty/BCCI

ஹார்திக் பாண்டியாவின் தலைமைப்பண்பு தனக்கு மகேந்திர சிங் தோனியை நினைவூட்டுவதாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் காவஸ்கர் தெரிவித்துள்ளார்.
எலிமனேட்டர் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியதன் மூலம் குஜராத் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது நாளை அஹமதாபாதில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நான்கு முறை கோப்பை வென்ற சென்னையை அந்த அணி எதிர்கொள்ளவிருக்கிறது.
14-ல்10 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ள குஜராத் அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. குஜராத்தின் தொடர் வெற்றிக்கு ஹார்திக் பாண்டியாவின் தலைமைப் பண்பும் ஒரு முக்கியக் காரணம். பந்துவீச்சில் இந்த ஆண்டு பெரியளவுக்கு கவனம் செலுத்தவில்லை என்றாலும் 14 இன்னிங்ஸில் 325 ரன்களை அவர் குவித்துள்ளார்.
இந்நிலையில் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள காவஸ்கர் "பாண்டியாவின் நிதானமான அணுகுமுறை எனக்கு தோனியை நினைவூட்டுகிறது. டாஸ் போடும் நிகழ்வில் வேண்டுமானாலும் தோனி, பாண்டியாவுடன் நட்புடன் நடந்துகொள்ளலாம். ஆனால் களத்துக்குள் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. தான் எந்தளவுக்கு விஷயங்களை வேகமாக கற்றுக்கொண்டுள்ளேன் என்பதை நிரூபிப்பதற்கு பாண்டியாவுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு."
மேலும் காவஸ்கர் கூறியதாவது: சிஎஸ்கேவைப் போலவே குஜராத்தும் ஒரு மகிழ்ச்சியான அணி. சிஎஸ்கேவை புள்ளிகள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியதிலேயே அவர்கள் எப்படி இந்த ஆண்டு விளையாடி வருகிறார்கள் என்பது புரியவரும். குஜராத்தின் வெற்றிக்கு அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் நெஹ்ராவுக்கும் ஒரு முக்கியப் பங்குண்டு என்றார்