நவம்பர் 18: தினேஷ் சண்டிமால் பிறந்தநாள்

ESPNcricinfo staff

தினேஷ் சண்டிமால் © AFP/Getty Images

1989

இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால் பிறந்தநாள் இன்று.

21 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சண்டிமாலின் தொடக்கம் சிறப்பானதாக இருந்தது. 23 வயதிலேயே டி20 அணிக்குத் தலைமை தாங்கி, இலங்கையின் இளம் கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றார். டெஸ்ட், ஒருநாளில் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இலங்கையின் காலேவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 168 பந்துகளில் 162 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவினார். 2017-ல் ஏஞ்சலோ மேத்யூஸுக்குப் பதில் சண்டிமால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான இலங்கை அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. இந்தத் தொடரில் அபுதாபி டெஸ்டில் 9 மணி நேரம் பேட்டிங் செய்த சண்டிமால் 155 ரன்கள் எடுத்தார்.

டெஸ்டில் 5,295 ரன்களும், ஒருநாளில் 3,854 ரன்களும் எடுத்துள்ளார்.

Comments