மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பிய மலிங்கா
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா அந்த அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் அப்பொறுப்பை வகித்தார்.
மும்பை அணிக்காக 11 வருடங்கள் விளையாடிய மலிங்கா, அந்த அணி வென்ற ஐந்து ஐபிஎல் கோப்பைகளில் நான்கில் (2013, 2015, 2017, 2019) தனது பங்களிப்பை அளித்துள்ளார். அதேபோல, 2011-ல் மும்பை அணி சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் வெல்லவும் மலிங்கா முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
2018-ல் அந்த அணியின் ஆலோசகராகப் பணியாற்றினார். இருப்பினும் 2019-ல் மும்பை அணிக்காக மீண்டும் விளையாடினார். மும்பை அணிக்காக 139 ஆட்டங்களில் விளையாடியுள்ள மலிங்கா 7.12 எகானமியில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் வரிசையில் 170 விக்கெட்டுகளுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
2021-ல் ஓய்வுபெற்ற மலிங்கா 2022 மற்றும் 2023-ல் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். எம்ஐ நியூயார்க், எம்ஐ கேப் டவுன் ஆகிய எம்ஐ டி20 அணிகளுக்கும் மலிங்கா, பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார்.