அணிகள் மாறிய ஷேன் பாண்ட், மலிங்கா

ESPNcricinfo staff

ஷேன் பாண்ட் © Getty Images

2024 ஐபிஎல் போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2015-ல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார் ஷேன் பாண்ட். அதன்பிறகு அந்த அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக அவர் இருந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐஎல்டி20யில் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பாண்ட் செயல்பட்டார். அந்தப் போட்டியில் பிளேஆஃப்புக்கு எம்ஐ அணி தகுதியடைந்தது. நியூஸிலாந்து அணிக்கும் 2012 முதல் 2015-ம் ஆண்டு வரை பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்தார்.

தற்போது, மும்பை அணியில் ஷேன் பாண்டுக்குப் பதில் மலிங்காவும் ராஜஸ்தான் அணியில் மலிங்காவுக்குப் பதில் ஷேன் பாண்டும் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த இரு ஆண்டுகளாக ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த மலிங்கா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதே பொறுப்புக்குத் திரும்பியுள்ளார்.

ஐபிஎல் 2023 போட்டியில் மும்பை அணி பிளேஆஃப்புக்குத் தகுதியடைந்தது. ராஜஸ்தான் அணி 5-வது இடத்தைப் பிடித்தது.

Comments