நவம்பர் 12: மெக்ராத் டெஸ்ட் அறிமுகம்

ESPNcricinfo staff

கிளென் மெக்ராத் © Getty Images

கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளரான ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் இன்று.

1993-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. 6.5 அடி உயரம் கொண்ட மெக்ராத், மெர்வ் ஹியூக்ஸுக்கு மாற்று வீரராக இந்த டெஸ்டில் சேர்க்கப்பட்டார். முதல் இன்னிங்ஸில் 12 மெய்டன்களுடன் 39 ஓவர்கள் வீசி 92 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு நடந்ததெல்லாம் ஊரறிந்த வரலாறு.

563 டெஸ்ட் விக்கெட்டுகளுக்கும், 381 ஒருநாள் விக்கெட்டுகளுக்குமான ஆரம்பப் புள்ளி இங்கிருந்துதான் தொடங்கியது. பின்னாளில் ஆஸ்திரேலிய அணி 3 உலகக் கோப்பைகளை வெல்வதற்கும், ஆஷஸில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் அதிமுக்கிய துருப்புச் சீட்டாக இருந்தார்.

டெஸ்டில் அதிக முறை 'டக் அவுட்' ஆனவர்களில் 35 முறை 'டக் அவுட்' ஆகி நான்காவது இடத்தில் உள்ளார் மெக்ராத். இதற்கான தொடக்கமும் இந்த ஆட்டத்தில்தான் நிகழ்ந்தது. முதல் இன்னிங்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

Comments