நவம்பர் 19: பாலியல் சர்ச்சையால் கேப்டன் பதவியிலிருந்து விலகிய டிம் பெயின்

ESPNcricinfo staff

டிம் பெயின் © Getty Images

2018-ல் ஆஸி. டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார் விக்கெட் கீப்பரான டிம் பெயின். 2019-ல் ஆஸி. அணி, ஆஷஸ் கோப்பையைத் தக்கவைக்க உதவினார்.

2017-ல் கிரிக்கெட் டாஸ்மானியா அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை டிம் பெயின் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, இதுகுறித்த விசாரணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டது. டிம் பெயின் விதிமுறைகளை மீறவில்லை என முடிவானதால் தண்டனையிலிருந்து அப்போது தப்பினார்.

ஆனால், 2021-ல் டிம் பெயின் அனுப்பிய குறுஞ்செய்திகளும் விசாரணையின் தகவல்களும் ஊடகங்களில் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, இனியும் ஆஸி. கேப்டனாக நீடிப்பது உகந்ததாக இருக்காது என்பதால் ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, கேப்டன் பதவியிலிருந்து விலகினார் டிம் பெயின். பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பாத பெயின், கடந்த மார்ச்சில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

Comments