நவம்பர் 20: நேதன் லயன் பிறந்தநாள்!

ESPNcricinfo staff

43-வது டெஸ்ட் சதத்தைக் கொண்டாடும் சச்சின் டெண்டுல்கர் © AFP

சச்சினின் மகத்தான உலக சாதனை

30 ஆயிரம் சர்வதேச ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் இதே நாளில் படைத்தார்.

2009-ல் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் அஹமதாபாதில் நடைபெற்றது. இந்த டெஸ்டின் இறுதி நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் 30 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் சச்சின். டெஸ்டில் 12,777 ரன்கள், ஒருநாளில் 17,178 ரன்கள், ஒரேயொரு டி20யில் 10 ரன்கள் மூலம் இந்தச் சாதனையைப் படைத்தார்.

இதே டெஸ்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 88-வது சர்வதேச சதத்தை அடித்தார். டெஸ்ட் டிராவில் முடிந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 34,357 ரன்கள் குவித்துள்ளார் சச்சின்.

1969

கிறிஸ் ஹாரிஸ் © AFP

கிறிஸ் ஹாரிஸ் பிறந்தநாள்!

நியூசிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ் ஹாரிஸ் பிறந்தநாள் இன்று.

ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அளவெடுத்து வைத்ததுபோல நியூசிலாந்துக்குக் கிடைத்தவர் கிறிஸ் ஹாரிஸ். பேட்டிங்கை படிப்படியாக மேம்படுத்திக்கொண்டார். இவரது மிதவேகப்பந்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கு உதவியது. பந்தை இருபுறமும் கட் செய்யக்கூடிய திறன் படைத்தவர் ஹாரிஸ். இவரது ஃபீல்டிங்கும் அட்டகாசமாக இருந்ததால், முக்கியமான ஆல்-ரவுண்டராக நியூசிலாந்தில் இருந்தார்.

1992 உலகக் கோப்பையில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி, நியூசிலாந்தின் வெற்றிகளுக்கு உதவினார். ஐசிசி நாக் அவுட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 6-வது விக்கெட்டுக்கு கிறிஸ் கேர்ன்ஸுடன் 122 ரன்கள் சேர்த்து நியூசிலாந்தை வெற்றி பெறச் செய்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 62 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் ஹாரிஸ்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஹீரோவாக இருந்த இவரால், டெஸ்டில் ஜொலிக்க முடியவில்லை. 250 ஒருநாள் ஆட்டங்களில் 4,379 ரன்களும், 203 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் 23 ஆட்டங்களில் 777 ரன்கள் மற்றும் 16 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

Comments