ஆஸி. டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு, சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை

ESPNcricinfo staff

சூர்யகுமார் யாதவ் © Associated Press

இந்த வாரம் முதல் தொடங்கும் டி20 தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை முடிந்த நான்காவது நாளில், வியாழன்று விசாகப்பட்டினத்தில் இத்தொடர் தொடங்குகிறது.

இந்த டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து பாதியில் விலகிய பாண்டியா, இத்தொடரிலும் பங்கேற்கவில்லை.

சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் ருதுராஜ் கெயிக்வாட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். உலகக் கோப்பையில் பங்கேற்ற ஸ்ரேயஸ் ஐயர், கடைசி இரு டி20 ஆட்டங்களில் துணை கேப்டனாகப் பங்கேற்கவுள்ளார். முதல்முறையாக இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு சூர்யகுமாருக்குக் கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அஹமது ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தனி ஆளாக அஸ்ஸாம் அணியை அரையிறுதிக்குக் கொண்டு சென்ற ரியான் பராக், அப்போட்டியில் தொடர் நாயகன் விருதைப் பெற்ற அபிஷேக் சர்மா ஆகியோரும் தேர்வாகவில்லை.

டி20 தொடர் டிசம்பர் 3 அன்று நிறைவுபெறுகிறது.

இந்திய டி20 அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விகீ), யஷஸ்வி ஜெயிஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விகீ), வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ஷிவம் துபே, ரவி பிஸ்னாய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார், ஸ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன், கடைசி இரு டி20களுக்கு மட்டும்)

Comments