நவம்பர் 24: இயான் போத்தம் பிறந்தநாள்

ESPNcricinfo staff

இயான் போத்தம் © PA Photos

1955

இயான் போத்தம் பிறந்தநாள்

இங்கிலாந்தின் தலைசிறந்த, மிகவும் பிரபலமான ஆல்-ரவுண்டர் இயான் போத்தமின் பிறந்தநாள் இன்று.

1977-ல் இங்கிலாந்துக்காக அறிமுகமாகி மூன்று ஆண்டுகளில் கேப்டன் ஆனார். 1981-ல் பேட்டிங், பந்துவீச்சு என சிறப்பாக செயல்பட்டு ஆஷஸ் வெற்றிக்கு இங்கிலாந்தை வழிநடத்தினார். அதிரடியான ஷாட்களை விளையாடக்கூடியவராக இருந்தாலும்கூட, பேட்டிங் தொழில்நுட்பத்தில் இவர் வல்லவர்.

1992 வரை இங்கிலாந்துக்காக விளையாடிய இவர், சரியான காரணங்களுக்காகவும், தவறான காரணங்களுக்காகவும் நாளிதழ் தலைப்புகளை அலங்கரித்துக்கொண்டே இருந்தார்.

டெஸ்டில் 5,200 ரன்கள் குவித்துள்ள போத்தம் 383 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஒருநாளில் 2,113 ரன்களும், 145 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

இன்றைக்கும் கிரிக்கெட் உலகில் இவருக்கென்று தனி இடம் உண்டு. என்றைக்கும் இங்கிலாந்து ரசிகர்கள் மனதில் இவருக்கு ஹீரோவுக்கான ஓர் இடம் உண்டு.

1969

கலுவிதரனா © AFP

கலுவிதரனா பிறந்தநாள்

இலங்கை முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் ரொமேஷ் கலுவிதரனா 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுக டெஸ்டிலேயே ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் விளாசி அறிமுகமானார். 1990-களில் ஒருநாள் கிரிக்கெட்டில் சனத் ஜெயசூரியாவுடன் தொடக்க பேட்டராக களமிறங்கி முதல் பந்திலிருந்தே அதிரடிக்கான முனைப்பைக் காட்டி புரட்சியை உண்டாக்கியவர் கலுவிதரனா.

1996 உலகக் கோப்பையில் இவர் எடுத்தது 73 ரன்கள் என்றாலும், அதற்கு நேரம் எடுத்துக்கொள்ளாமல் இதை வெறும் 52 பந்துகளில் அடித்து முனைப்பை வெளிப்படுத்தியவர். இவர் சிறிது நேரம் களத்தில் நின்றாலும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய கிரிக்கெட்டை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்.

டெஸ்டில் 1,993 ரன்களும், ஒருநாளில் 3,711 ரன்களும் எடுத்துள்ளார்.

1952

பிரிஜேஷ் படேல் © AFP

பிரிஜேஷ் படேல் பிறந்தநாள்!

இந்திய முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் பிறந்தநாள் இன்று.

இந்திய அணிக்காக 21 டெஸ்ட், 10 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், தலைசிறந்த ஃபீல்டராக இருந்தார். முதல் தர கிரிக்கெட்டில் ரன் மழை பொழிந்த பிரிஜேஷ் 45.63 சராசரியில் 11,911 ரன்கள் குவித்துள்ளார்.

ரஞ்சியில் அதிக ரன்கள் (57 சராசரியில் 7,126 ரன்கள்) மற்றும் அதிக சதங்கள் (26) என்ற சாதனையை நீண்ட காலத்துக்கு தக்கவைத்திருந்தார்.

ஓய்வுக்குப் பிறகு நிர்வாகப் பொறுப்புகளை வகிக்கத் தொடங்கினார். 2019 முதல் 2022 வரை ஐபிஎல் தலைவராக இருந்தார்.

1982

அமித் மிஸ்ரா © BCCI

அமித் மிஸ்ரா பிறந்தநாள்!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

2003-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானாலும், 2008-ல் தான் டெஸ்டில் விளையாடுகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், அறிமுக ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த டெஸ்டிலும் 2010 சிட்டகாங் டெஸ்டிலும் தலா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், மற்ற சுழற்பந்துவீச்சாளர்கள் இவரது இடத்தை நிரப்பினார்கள்.

2013-ல் ஐபிஎல்-லில் சிறப்பாகப் பந்துவீச மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2015-ல் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய இவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெஸ்டில் 76 விக்கெட்டுகளையும், ஒருநாளில் 64 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20யில் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்-லில் 161 ஆட்டங்களில் 173 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் நான்காவது இடத்தில் உள்ளார்.

Comments