குஜராத் அணியால் விடுவிக்கப்பட்ட பேட்டர் புதிய சாதனை

ESPNcricinfo staff

உர்வில் படேல் © GCA

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்டர் உர்வில் படேல் 41 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் சதத்தை அடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த 2-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார் 25 வயது உர்வில் படேல். 2010-ல் யூசுப் பதான் 40 பந்துகளில் சதமடித்து அப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

2023 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டார் உர்வில் படேல், ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சமீபத்தில் ஐபிஎல் 2024 போட்டிக்கான தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் சமர்ப்பித்தன. குஜராத் அணி உர்வில் படேலை விடுவித்திருந்தது. இந்நிலையில் அதிரடியாக விளையாடிச் சதமடித்துள்ளார் உர்வில் படேல்.

160 ரன்களை இலக்கை விரட்டிய குஜராத், உர்வில் படேலின் ஆட்டத்தால் வெறும் 13 ஓவர்களில் இலக்கை எட்டியது.

Comments