முகேஷ் குமாருக்குத் திருமணம்: இந்திய அணியில் தீபக் சஹார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டம் கெளஹாத்தியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுச் செய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக முகேஷ் குமாருக்கு பதிலாக அவேஷ் கான் இடம்பெற்றுள்ளார்.
முகேஷ் குமாருக்குத் திருமணம் நடைபெறவுள்ளதால் இந்த ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
முகேஷ் குமாரின் திருமணம் குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியதாவது, இன்று முகேஷ் குமார் விளையாடவில்லை. அவர், தன் வாழ்க்கையின் முக்கியமான ஆட்டத்தில் விளையாடவுள்ளார். அவருக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது என்றார்.
முகேஷ் குமாருக்குப் பதிலாக மீதமுள்ள டி20 ஆட்டங்களுக்கு தீபக் சஹார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2022 அக்டோபர் மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்திய டி20 அணியில் இணைகிறார் தீபக் சஹார்.
திருமணம் முடிந்த பிறகு, முகேஷ் குமார் மீண்டும் 4-வது டி20 ஆட்டத்திற்கு முன்பு அணியுடன் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.