நவம்பர் 30: டான் பிராட்மேன் அறிமுகம்
1928
உலகின் தலைசிறந்த பேட்டராக இன்றும் கொண்டாடப்படும் டான் பிராட்மேன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான நாள் இன்று.
1928-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 20 வயதில் அறிமுகமானார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிராட்மேன்.
முதல் இன்னிங்ஸில் 7-வதாகக் களமிறங்கி 18 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 6-வதாகக் களமிறங்கி ஒரு ரன்னும் எடுத்தார். அந்த டெஸ்டை 375 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.
முதல் டெஸ்டில் ரன்கள் குவிக்கத் தவறினாலும் அடுத்த டெஸ்டிலேயே ஒரு சதமும் ஓர் அரை சதமும் எடுத்துத் தன் திறமையை வெளிப்படுத்தினார் பிராட்மேன்.