தெ.ஆ. பயணம்: மூன்று கேப்டன்கள் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த மூன்று தொடர்களிலும் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையில் டெஸ்ட் அணியும், கேஎல் ராகுல் தலைமையில் ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலிருந்து சற்று ஓய்வு வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார் என இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காயத்தின் தன்மையைப் பொறுத்து ஷமி விளையாடுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயத்திலிருந்து பாண்டியா இன்னமும் மீண்டு வராத நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது முதல் பணியாக தென்னாப்பிரிக்க பயணம் அமையப்போகிறது.
டி20 தொடர் டிசம்பர் 10, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் ஜனவரி 3-ம் தேதியும் நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெயிஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்குர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ருதுராஜ் கெயிக்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுவேந்திர சஹால், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார்.
டி20 தொடருக்கான இந்திய அணி:
யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சஹார்.
*
தென்னாப்பிரிக்க பயணத்தின்போது இந்தியா ஏ அணி, தென்னாப்பிரிக்கா ஏ-வுக்கு எதிராக இரு நான்கு நாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. தவிர, இந்திய அணி இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு 3 நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இதற்கென தனியாக அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் நான்கு நாள் ஆட்டத்துக்கான இந்திய ஏ அணி:
சாய் சுதர்சன், அபிமன்யூ ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், பிரதோஷ் ரஞ்சன் பால், சர்ஃபிராஸ் கான், கேஎஸ் பரத் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல், ஷார்துல் தாக்குர், புல்கித் நரங், சௌரப் குமார், மனவ் சுதர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், வித்வத் காவேரப்பா, துஷார் தேஷ்பாண்டே
மூன்று நாள் ஆட்டத்துக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், சர்ஃபிராஸ் கான், பிரதோஷ் ரஞ்சன் பால், கேஎல் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், புல்கித் நரங், ஹர்ஷித் ராணா, ஷார்துல் தாக்குர், சௌரப் குமார், மனவ் சுதர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், வித்வத் காவேரப்பா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, நவ்தீப் சைனி.
2-வது நான்கு நாள் ஆட்டத்துக்கான இந்திய ஏ அணி:
சாய் சுதர்சன், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா, கேஎல் பரத் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், மனவ் சுதர், ஆகாஷ் தீப், வித்வத் காவேரப்பா, நவ்தீப் சைனி.
அபிமன்யூ ஈஸ்வரன் காயமடைந்திருப்பதால், அதன் நிலையைப் பொறுத்தே அவர் விளையாடுவது உறுதி செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா ஏ ஆட்டங்களுக்கான அட்டவணை:
டிசம்பர் 11 முதல் 14 வரை முதல் ஆட்டம்
டிசம்பர் 20 முதல் 22 வரை இரண்டாவது ஆட்டம்
டிசம்பர் 26 முதல் 29 வரை மூன்றாவது ஆட்டம்