நியூசிலாந்து பயணம்: ஷாண்டோ தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு

ESPNcricinfo staff

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ © ICC via Getty Images

நியூசிலாந்து பயணத்துக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தலைமையிலான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஷகிப் அல் ஹசன் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு இன்னும் சீராகவில்லை. ஷகிப் மற்றும் லிட்டன் தாஸ் இல்லாத நிலையில், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வங்கதேச அணியை வழிநடத்தி வந்தார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அணியை அவரே வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கும் இவரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 8-ம் தேதி எடுக்கப்படவுள்ள எக்ஸ்ரேவைப் பொறுத்தே ஷகிப் காயத்தின் தன்மை குறித்து தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, தோள்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய மஹ்மதுல்லா, டஸ்கின் ஆகியோர் தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார்கள். எபாதத் ஹொசைன் முழங்கால் அறுவைச் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வருகிறார்.

அஃபிஃப் ஹொசைன், சோமியா சர்கார், ரிஷத் ஹொசைன் மற்றும் அறிமுக இடக்கை சுழற்பந்துவீச்சாளர் ரகிபுல் ஹசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி:

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தன்ஸித் ஹாசன், அனமுல் ஹக், தௌஹித் ஹிருதாய், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், ஆஃபிஃப் ஹொசைன், சோமியா சர்கார், மெஹிதி ஹாசன் மிராஸ், முஸ்தபிஸூர் ரஹ்மான், ஷொரிஃபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹாசன், ஹசன் மஹ்மூத், ரிஷத் ஹொசைன், ரகிபுல் ஹசன்.

டி20 தொடருக்கான வங்கதேச அணி:

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), லிட்டன் தாஸ், ரோனி தாலுக்தார், தௌஹித் ஹிருதாய், ஷமிம் ஹொசைன், ஆஃபிஃப் ஹொசைன், சோமியா சர்கார், மெஹிதி ஹாசன் மிராஸ், மஹேதி ஹாசன், முஸ்தபிஸூர் ரஹ்மான், ஷொரிஃபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹாசன், ஹசன் மஹ்மூத், ரிஷத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம்.

Comments