டிசம்பர் 2: அப்துல் ரசாக் பிறந்தநாள்!

ESPNcricinfo staff

அப்துல் ரசாக் © AFP

1979

பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்கின் பிறந்தநாள் இன்று.

பேட்டிங்கில் 7-வது வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவதிலும் பந்துவீச்சில் லேட் இன்ஸ்விங்கில் எதிரணி கூட்டணிகளைப் பிரிப்பதிலும் ரசாக் வல்லவர்.

2000-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ஹாட்ரிக் எடுத்து இச்சாதனையை நிகழ்த்திய இளம் வீரர் என்கிற பெருமையை அடைந்தார். இம்ரான் கானுக்குப் பிறகு முழுமையான ஆல்ரவுண்டராக பாகிஸ்தானுக்கு நம்பிக்கையளித்தார்.

தொடர் காயங்கள் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக டெஸ்ட் அணியில் இவருடைய இடம் கேள்விக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, காயம் காரணமாக 2007 உலகக் கோப்பையில் இவர் விளையாடவில்லை. 2007 டி20 உலகக் கோப்பையிலும் இவர் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கவுன்டி, ஐசிஎல் போட்டிகளில் விளையாடியதைத் தொடர்ந்து, 2009-க்குப் பிறகு ஓய்விலிருந்து திரும்பினார். 2009 டி20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் ரசாக் இடம்பெற்றிருந்தார்.

எனினும், 2011 உலகக் கோப்பையில் ரசாக் அணியில் இடம்பெற்றபோதும் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை.

பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்டுகள், 265 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள அப்துல் ரசாக், ஒருநாள் கிரிக்கெட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து, 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Comments