டெஸ்ட், டி20 தொடர்கள்: இந்திய மகளிர் அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. பிறகு, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தலா ஒரு டெஸ்டில் விளையாடவுள்ளது இந்திய மகளிர் அணி.
இந்நிலையில் டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் ஹர்மன்ப்ரீத் கௌர் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட நட்சத்திர பந்துவீச்சாளரான ரேணுகா சிங் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார்
கடந்த டபிள்யுபிஎல்-லில் அசத்திய ஸ்ரேயங்கா பாட்டீல், சைகா இஷாக் ஆகியோர் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். ரேணுகா மற்றும் இஷாக் ஆகியோர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த 24 வயது இடக்கை தொடக்க வீராங்கனை சதீஷ் சுபா முதல் முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார், சமீபத்தில், நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் 99 மற்றும் 49 ரன்கள் எடுத்திருந்தார்.
2014 நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்டில் விளையாடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி இல்லாமலும் இந்திய மகளிர் அணி விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். ஹர்மன்ப்ரீத் கெளர் முதல் முறையாக டெஸ்டில் கேப்டனாகச் செயல்படவுள்ளார்.
இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி
ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஷெஃபாலி வர்மா, தீப்தி சர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கௌர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னாத் காஷியாப் , சைகா இஷாக், ரேணுகா சிங், டிடாஸ் சது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா, மின்னு மணி.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய மகளிர் அணி
ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஷெஃபாலி வர்மா, தீப்தி சர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஸ்னே ராணா, சுபா சதீஷ், ஹர்லீன் தியோல், சைகா இஷாக், ரேணுகா சிங், டிடாஸ் சது, மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர்.