தென்னாப்பிரிக்க மகளிர் அணியின் கேப்டனாக வோல்வார்ட் நியமனம்

ESPNcricinfo staff

லாரா வோல்வார்ட் © AFP/Getty Images

தென்னாப்பிரிக்க மகளிர் அணியின் முழு நேர கேப்டனாக லாரா வோல்வார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான், நியூசிலாந்து தொடர்களில் இடைக்கால கேப்டனாக செயல்பட்ட வோல்வார்ட், தற்போது அனைத்து வகையான போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிராக தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதற்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் பிக்பாஷில் சிட்னி தண்டருக்காக விளையாடும் மரிஸான் கேப்புக்கு டி20 தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் மட்டும் விளையாடுகிறார். வேகப்பந்துவீச்சாளர் அயபோங்கா காகா, ஆல்-ரவுண்டர்கள் ட்ரியான், நாடின் டி கிளெர்க் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளார்கள்.

டி20 தொடர் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 8 வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 23 இடையே நடைபெறுகிறது.

Comments