ஸ்டம்ப் எகிறியது!! ஆட்டத்தை முடித்துவிட்டார் ஜடேஜா. லெங்த் பந்து. அபாட் பந்தைக் கணிக்கவில்லை. விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (டிஎல்எஸ் வழிமுறை)
99 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறைப்படி) ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
ஷ்ரேயஸ் ஐயர் - கில் ஆகியோரின் சதத்தால் இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்தது. சூர்யகுமார் யாதவ் தன்மீது அணியினர் வைத்திருக்கும் நம்பிக்கை சரியானது தான் என நிரூபிக்கும் வகையில் விளையாடினார். 400 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்தது.
மழை காரணமாக 33 ஓவர்களில் 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைத்தது. இதனை அஸ்வின் மற்றும் ஜடேஜா பயன்படுத்திக்கொண்டார்கள்.
இன்றைய ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவின் நடுவரிசை பேட்டர்கள் நிலைத்து ஆடத் தவறிவிட்டார்கள். கடைசியில் அபாட் மட்டும் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். ஆனால் அவருடைய இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார் ஜடேஜா.
இது ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான 5 வது தோல்வியாகும். தென்னாப்ப்பிரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவிடமும் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது அந்த அணி.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இல்லாமலேயெ தொடரை வென்று அசத்தியுள்ளார் கேப்டன் கே.எல். ராகுல். இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் ராஜ்கோட்டில் செப்டம்பர் 27-ல் நடைபெறவுள்ளது.
நீளப்பந்து. எக்ஸ்ட்ரா கவரில் அடித்தார். ரன் எடுக்கவில்லை.
ஒருவழியாக விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி. நீளப்பந்து. கணிக்கத் தவறிவிட்டார். ஸ்டம்ப் எகிறியது.
ஆஃப் பக்கம் ரூம் கொடுத்து வீசப்பட்ட பந்து. ஷார்ட் தேர்ட்மேன் திசையில் அடித்தார். ஒரு ரன்.
வேகத்தைக் குறைத்து வீசப்பட்ட பந்து. முன்னங்காலில் சென்று கவரில் அடித்தார். 2 ரன்கள் ஓடிவிட்டார்கள்.
ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்து. கவரில் அடித்தார். ரன் அவுட் வாய்ப்பு இருந்தது.
பேக் ஆஃப் த லெங்தில் வீசப்பட்ட பந்து. பேட்டின் விளிம்பில் பட்டு தேர்ட் மேன் திசையில் சென்றது. தடுத்திருக்க வேண்டிய பவுண்டரி.
அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து வீசப்பட்ட லெங்த் பந்து. பேட்டின் விளிம்பில் பட்டு பேக்வர்ட் பாய்ண்ட் திசையில் சென்றது பந்து. பவுண்டரி.
கால் பக்கம் வீசப்பட்ட பந்து. தடுத்து ஆட முயன்றார். பேட்டின் விளிம்பில் பட்டுச் சென்றது.
ஆஃப் பக்கம் வந்த பந்தை பாய்ண்டில் அடித்தார். ரன் இல்லை.
ஆஃப் பக்கம் வீசப்பட்ட பந்து. கீப்பரிடம் சென்றது.
லெங்த் பந்து. லாங் ஆனில் தூக்கி அடித்தார். சிக்ஸர். இதன் மூலம் தனது முதல் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் அபாட்.
நீளப்பந்து. லாங் ஆஃபில் அடித்தார். இம்முறையும் ரன் ஓடவில்லை.
கால் பக்கம் வீசப்பட்ட பந்து. ஸ்கொயர் லெக்கில் அடித்தார். ரன் ஓடவில்லை.
நீளப்பந்து. பேட்டை வீசினார் ஹேசில்வுட். கவர் திசையில் சென்றது.
லோ ஃபுல் டாஸாக வீசப்பட்ட பந்து. லாங் ஆனில் அடித்தார் அபாட். ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.
நீளப்பந்து. ஸ்வீப்பர் கவரில் அடித்தார் அபாட்.
மீண்டும் ஸ்லாட்டில் வீசப்பட்ட பந்து. மடக்கி லாங் ஆனில் அடித்தார். பவுண்டரி!
நீளப்பந்து. லாங் ஆனில் தூக்கி அடித்தார் அபாட். சிக்ஸர்ர்ர்!!
நீளப்பந்து. கவரில் தடுத்து ஆடினார் அபாட்.
2W | ||||
1W | ||||
2W | ||||
1W | ||||
ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தூர் | |
டாஸ் | ஆஸ்திரேலியா, ஃபீல்டிங் தேர்வு |
தொடர் | |
பருவம் | 2023/24 |
ஆட்ட நாயகன் | |
தொடரின் முடிவு | இந்தியா லெட் 3- ஆட்டத் தொடர் 2-0 |
ஆட்ட எண் | ஒருநாள் எண் 4654 |
ஆட்ட நேரங்கள் (உள்ளூர் நேரம்) | 13.30 start, First Session 13.30-17.00 Interval 17.00-17.45, Second Session 17.45-21.15 |
ஆட்ட நாள்கள் | செப்டம்பர் 24, 2023 - பகலிரவு ஆட்டம் (50- ஓவர் ஆட்டம்) |
ஒருநாள் ஆட்டங்கள் அறிமுகம் | |
நடுவர்கள் | |
டிவி நடுவர் | |
மாற்று நடுவர் | |
ஆட்ட நடுவர் |