ஐபிஎல் 2023: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்!
அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டு ப்ளஸி முதலிடம் பிடித்தார்.
ESPNcricinfo staff
29-May-2023
ஷுப்மன் கில் • Associated Press
ஐபிஎல் 2023 இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக கோப்பை வென்றுள்ளது. இதன்மூலம், அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்துள்ளது.
ஆட்டநாயகன் விருதை டெவான் கான்வே வென்றார். தொடர் நாயகன் விருதை ஷுப்மன் கில் வென்றார்.
அதிக ரன்கள்:
ஷுப்மன் கில் (குஜராத்) - 17 ஆட்டங்கள் - 890 ரன்கள்
ஃபாஃப் டு ப்ளஸி (பெங்களூர்) - 14 ஆட்டங்கள் - 730 ரன்கள்
டெவான் கான்வே (சென்னை) - 16 ஆட்டங்கள் - 672 ரன்கள்
விராட் கோலி (பெங்களூர்) - 14 ஆட்டங்கள் - 639 ரன்கள்
யஷஸ்வி ஜெயிஸ்வால் (ராஜஸ்தான்) - 14 ஆட்டங்கள் - 625 ரன்கள்
அதிக சிக்ஸர்கள்:
ஃபாஃப் டு ப்ளஸி (பெங்களூர்) - 14 ஆட்டங்கள் - 36 சிக்ஸர்கள்
ஷிவம் துபே (சென்னை) - 16 ஆட்டங்கள் - 35 சிக்ஸர்கள்
ஷுப்மன் கில் (குஜராத்) - 17 ஆட்டங்கள் - 33 சிக்ஸர்கள்
கிளென் மேக்ஸ்வெல் (பெங்களூர்) - 14 ஆட்டங்கள் - 31 சிக்ஸர்கள்
ருதுராஜ் கெயிக்வாட் (சென்னை) - 16 ஆட்டங்கள் - 30 சிக்ஸர்கள்
அதிக விக்கெட்டுகள்:
வீரர் - ஆட்டங்கள் - விக்கெட்டுகள்
முகமது ஷமி (குஜராத்) - 17 ஆட்டங்கள் - 28 விக்கெட்டுகள்
மோஹித் சர்மா (குஜராத்) - 14 ஆட்டங்கள் - 27 விக்கெட்டுகள்
ரஷித் கான் (குஜராத்) - 17 ஆட்டங்கள் - 27 விக்கெட்டுகள்
பியூஷ் சாவ்லா (மும்பை) - 16 ஆட்டங்கள் - 22 விக்கெட்டுகள்
யுவேந்திர சஹல் (ராஜஸ்தான்) - 14 ஆட்டங்கள் - 21 விக்கெட்டுகள்